வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவிக்கின்றார்.
மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமிற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்கலும் ஏற்படக்கூடும் என அவர் எதிர்வு கூறியுள்ளார். (NewsMe)
Listen to this news



















